பாட்டிவைத்தியம் (naturecure)
கறுப்பு நீங்க
முழங்கை, குதிகால் போன்ற பகுதிகளில் கறுப்பு ஏற்பட்டால் தினசரி எலுமிச்சை பழச் சாற்றை தேய்த்து வந்தால் குணமடையும்.
சுகப்பிரசவம் பெற
கர்ப்பிணி பெண்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொண்டைக்கடலை சுண்டல் செய்து சாபிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும்.
உடல் பலம் பெற
நோயிலிருந்து குணமானவர்கள் ஆரஞ்சுப் பழச் சாற்றுடன் தேனை கலந்து சாப்பிட்டால் உடல் சீக்கிரம் பலம் பெரும்.
நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அஜீரணம் நீங்க
மோரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச் சாறு கலந்து ஒரு டம்ளர் குடிக்க அஜீரணம் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாபிட்டால் பலம் பெரும்
காய்ச்சல் குறைய
இலவு இலைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி இந்நீரால் தலையை கழுவி வந்தால் காய்ச்சல், தலைவலி குறையும்.
குத்தல் குறைய
தைவேளை சமூலத்தை நன்கு இடித்து சாறு பிழிந்து பின்பு சாறு பிழிந்த சக்கையை தலையில் வைத்து கட்டி வந்தால் உடம்பில் ஏற்படும்...
காய்ச்சல் குறைய
2 இலந்தை பழம், 4 உலர்ந்த திராட்சை, 3 கிராம் அளவு நாய்க்கடுகு மற்றும் 10 கிராம் கற்கண்டு ஆகியவற்றை எடுத்து...