எலுமிச்சை கெடாமல் இருக்க
எலுமிச்சை பழத்தை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது..
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சை பழத்தை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது..
கவரில் ஒட்டிய ஸ்டாம்பை எடுக்க பின்புறம் தண்ணீர் தடவினால் ஸ்டாம்பை பிரித்து விடலாம்.
ஊதுபத்தியை தண்ணீரில் இலேசாக நனைத்து உலர விட்டு பற்ற வைத்தால் ஊதுபத்தி நிதானமாக எரியும். அதிக மணம் வீசும்.
பிளாஸ்டிக் செருப்புகள் சில சமயம் காலைக்கடித்தால் நன்றாக தண்ணீரில் ஊற விடவும்.
கண்ணாடி வளையல்கள் வாங்கியவுடன் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்தப் பிறகு அணிந்து கொண்டால் நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.
மல்லிகை மொட்டுக்களைத் தண்ணீரில் போட்டுப்பின் கட்டினால் அதிக நேரம் பூ விரியாமல் இருக்கும்.
பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டால் பூக்குவளையில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நேரம் புதியவையாகவே இருக்கும்.
பூக்கள் வாடாமல் இருக்க ஒரு தட்டில் வைத்து தண்ணீரில் அலம்பிய ஒரு பத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத்தால் பூக்கள் புதிதாக...
தேங்காய் உடைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்தால் நேர் பாதியாக உடைபடும். தேங்காய் துருவும் போது பிசிறுகள் பாத்திரத்தில் விழாது.