காஸ் அடுப்பு
அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தப்படுத்திய பின் உபயோகிக்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தப்படுத்திய பின் உபயோகிக்கவும்.
ஒரு படி தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல் இழைகள் விலகாமல் இருக்கும்.
பாத்ரூம் டைல்ஸ்களில் அழுக்குப் படிந்தால் ஒரு பங்கு வினீகருக்கு நாலு பங்கு தண்ணிரை கலந்து கழுவி விடவும்.
தரை பழுப்பாக இருந்தால் நீலப் பொடியை மூட்டையாகக் கட்டி தண்ணிரில் போட்டுத் துடைத்தால் தரை வெண்மையாக மாறும்.
துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டித் தண்ணிரில் கலந்தால் நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவும்.
பிரம்பு நாற்காலிகள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் அரை லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஆக்ஸாலிக் ஆசிட் கரைத்துத் தேய்த்து காய விடவும்....
தண்ணீருடன் சிறிது பாலைக் கலந்து வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால் காயாமல் இருக்கும்.
தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாது. தினமும் நீரை மாற்ற வேண்டும்.
வாழைக் காய்களைத் தண்ணீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாட்களுக்குப் பழுத்துப் போகாது.