கட்டிகள் உடைந்துபோக
புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் கட்டிகள் உடைந்துபோகும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் கட்டிகள் உடைந்துபோகும்.
வேப்ப இலைகளை பொடி செய்து அதனுடன் மஞ்சள் பொடி கலந்து சந்தனத்தில் குழைத்துக் கட்டி மேல் தடவி வந்தால் கட்டிக் குறையும்.
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டிமேல் பூசிவர கட்டி கரையும்.
புகையிலையை அரைத்து சிற்றாமணக்கெண்ணெயுயுடன் கலந்து வேனல் கட்டி மீது தடவி வர கட்டி பழுத்து உடையும்.
பப்பாளி இலையை மைபோல் அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப்போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்.
சுண்ணாம்பு , மாவிலங்கப்பட்டை அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து தினமும் கட்டி உள்ள இடத்தில் தடவி வர கட்டி உடையும்.
வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உண்டு வர நெறிக்கட்டிகளால் வரும் காய்ச்சல் குறையும்.