மூட்டுவலி குணமாக
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
வாழ்வியல் வழிகாட்டி
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
சப்பாத்தி இலைக்கள்ளி மலர்களை நசுக்கி கட்டிகளின் மீது வைத்து கட்டிவர கட்டிகள் குணமாகும்.
கோவைகிழங்கு சாறை 10மி.லி அளவு குடித்து வந்தால் கண்டமாலை வீக்கம் தீரும்.
கொன்றைவேர்பட்டை மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் அரையாப்பு கட்டி நீங்கும்.
பீச்சங்கு இலைச்சாறை விளக்கெண்ணெயில் காய்ச்சி ஒரு கரண்டி அளவு குடிக்க வேண்டும்.
தென்னம்பூவை வாயிலிட்டு மென்று சாப்பிட்டால் அரையாப்புக் கட்டி மற்றும் சிலந்திக் கட்டி குறையும்.
எருக்கன் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.
துத்தி இலையில் நல்லெண்ணெயை தடவி வாட்டி பொறுக்கும் சூட்டில் கட்டி மேல் ஓட்டும் படி வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.