வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட
கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
வாழ்வியல் வழிகாட்டி
கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.
தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால் எலுமிச்சைச்சாறு பிழிந்தால் போதுமானது.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்துக் கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.
எலுமிச்சை பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து எடுத்துப் பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம்.
சூட்டோடு இருக்கும் உணவுப் பொருட்களில் எலுமிச்சைச்சாற்றை சேர்க்ககூடாது. அப்படி செய்தால் உணவு கசந்து விடும். சூடு அறிய பிறகு சேர்க்க வேண்டும்.
எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தல் தான் ருசியாக இருக்கும்.
சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
1 தேக்கரண்டி கசகசாவை இடித்து பொடியாக்கி அதனுடன் எலுமிச்சைச்சாறு மற்றும் நீர் விட்டு நன்றாக கலந்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு,...