உடல் குளிர்ச்சி பெற
அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.
வாழ்வியல் வழிகாட்டி
அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.
பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு...
மிளகரணை காய், வேர்பட்டை ஆகியவற்றை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் பிடிப்பு வலி குறையும்.
கொள்ளுக்காய் வேளை செடி வேரை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வீக்கம் குறையும்.
மாவிலங்க இலையை எடுத்து நன்கு அரைத்து பற்றுப்போட்டு வந்தால் உடலில் ஏற்படும் அனைத்து வீக்கமும் குறையும்.
வெற்றிலையில் வேப்பஎண்ணெய் தடவி சூடு உடல் தாங்குமளவுக்கு தணலில் வாட்டி உடலில் வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
கொன்றை பூவுடன், ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் ஆகியவை குறையும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை எடுத்து பிசைந்து கூழாக்கி உடலில் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
கருநொச்சி இலைகளை சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் உடல் வலி மற்றும் வாத வலி குறையும்.
தேங்காய் ஓடுகளை ஒரு துவாரமிட்ட சட்டியில் போட்டு எரிக்கவேண்டும். அவைகளிலிருந்து வடியும் தைலத்தைச் சட்டிக்குக் கீழ் துவாரத்திற்கு நேராக ஒரு பத்திரத்தை...