உடல் வலிமை பெற
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால், உடல் வலிமை பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால், உடல் வலிமை பெறும்.
பசலைக் கீரை சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் வலிமை பெறும்.
பிரண்டையை நெய்விட்டு வதக்கி வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
நிழலில் உலர்த்தித் தூள் செய்த வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் – இவை இரண்டையும் ஒன்றாகக்...
கரிசலாங்கண்ணி கீரையை காயவைத்து பொடி செய்து பால்,தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல்வலு பெறும்.
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
வெள்ளரி இலைகளை, சீரகத்துடன் வறுத்துப் பொ டி செய்து தண்ணீரில் கலந்து குடித்துவர உடல் வலிமை பெறும்.
சக்கரவர்த்தி கீரைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.உடலுக்கு சக்தியைத் தரும்