பாட்டிவைத்தியம் (naturecure)
மூட்டு வலி குணமாக
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
இருமல் குறைய
பிரமத்தண்டு இலையை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.
மூட்டு வலி குணமாக
எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும்....
இருமல் குறைய
துத்தி பூவை காய வைத்து பொடி செய்து தேன் சேர்த்து பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.
மூட்டு வலி குறைய
கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.
இருமல் குறைய
விஷ்ணுகாந்தி இலையை அரைத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை குடிக்க இருமல் குறையும்
மூட்டுவலி குறைய
மூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.
மூட்டுவலி குறைய
கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.