பாட்டிவைத்தியம் (naturecure)
அதிக தாகம் குறைய
களா மர காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன்கொள்ள, அதிக தாகம் குறையும்.
உடல் சூடு குறைய
நத்தைச் சூரியின் விதையை வறுத்துப் பொடியாக்கி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால், கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை குடித்து வர...
தீராத தாகம் குறைய
கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீராத தாகம் குறையும்.
உடலில் சூடு குறைய
நெல்லிவற்றலை இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.
உடல் குளிர்ச்சி அடைய
வெந்தயத்தை பாலில் அரைத்து அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமஅளவு சேர்த்து தைலபதமாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.
உடல் குளிர்ச்சி பெற
ஆரைக்கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
உடல் குளிர்ச்சி அடைய
காய்ந்த தாமரை விதைகள் ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும்...
உடல் சூடு குறைய
செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி 2 வேளை...
அதிக தாகம் குறைய
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிக தாகம், பித்த மயக்கம் குறையும்.