புண் அழுகாமல் இருக்க
குப்பைமேனிஇலையை அரைத்து வெட்டுக்காய புண் மீது போட்டால் புண் அழுகாமல் இருக்கும்
வாழ்வியல் வழிகாட்டி
குப்பைமேனிஇலையை அரைத்து வெட்டுக்காய புண் மீது போட்டால் புண் அழுகாமல் இருக்கும்
இலந்தை இலையை மைய அரைத்து காயத்தின் மீது பற்று போட்டு வந்தால் வெட்டுக்காயம் குணமாகும்.
மாம்பருப்பை நெய்யில் வறுத்து பொடி செய்து அரைக்கிராம் அளவு பொடியை மோரில் கலக்கி குடிக்க ஆசனவாய் எரிச்சல் தீரும்.
மாதுளமபழத்தோலை வறுத்து கரியாக்கி பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவி வர எரிச்சல் குணமாகும்.
ஆமணக்கு எண்ணெயுடன் கஞ்சாங்கோரை இலையை சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் ஆசன வாயில் வைத்து கட்டலாம்.
பொடுதலை மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து 1கிராம் அளவு தயிருடன் கலந்து கொடுக்கவும்.
சிற்றகத்தி விதையை ஊற வைத்து அரைத்து 5 கிராம் அளவு சாப்பிடவும்.