வைத்தியம்
வயிற்று கடுப்பு குறைய
தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்
பித்தம் நீங்க
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
உஷ்ணபேதி குறைய
உலர்ந்த மாம்பூ, சீரகத்தை தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்
உடல் சூட்டுக்கு
அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு நல்லது.
தேக உஷ்ணம் நீங்க
ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி எடுத்து வறுத்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் நீங்கும்.
மலச்சிக்கல் குறைய
அகத்திக்கீரையை சாறு எடுத்து சர்க்கரை கலந்து 60 மில்லி வீதம் இரவு படுக்கும் முன் பருகி வர வயிற்றுப்புழுகள், மலச்சிக்கல் ஆகியவை...
சரும வியாதிகள் குணமாக
நெல்லிப் பொடியை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சரும வியாதிகள் குணமாகும்.
சீதபேதி குறைய
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு,...