சல மாந்தம்-நீர் மாந்தம்

குழந்தைகளுக்கு சுரம் அதிகமாயிருக்கும். உடல் மெலிந்து கைகால்கள் மட்டும் வீங்கி நமைச்சல் உண்டாகும். முகம் பளபளப்பாக இருக்கும். எச்சல் தடித்திருக்கும். வயிறு பொருமி, மலம் கொஞ்சம் கொஞ்சமாக கழியும். நீர் கடுப்புடனும், மஞ்சளாகவும் இருக்கும். நீர் இறங்கும் போது எரிச்சல் தாங்காமல் குழந்தை கதறி அழும். உடம்பு சிலிர்த்திருக்கும். குழந்தை தூங்குவதை போலிருந்து சிரிக்கும். பால் குடிக்காது.

மருந்து

நொச்சியிலை – 10 கிராம்
துளசி இலை – 20 கிராம்
செம்முள்ளி இலை – 10 கிராம்
தூதுவளை இலை – 10 கிராம்
வெதுப்படக்கி இலை – 10 கிராம்
திருநீற்று பச்சை இலை – 10 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்துப் பிட்டவித்துப் பிழிந்து சாறெடுத்துக் கொண்டு,

சீரகம் – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்

இவற்றை ஒன்று சேர்த்து இளவறுப்பாக வறுத்துப் பொடித்த பொடியையும், வெங்காயம் (பொரித்தது) 5 கிராம் போட்டு சாறுடன் கலந்து கொள்ளவும். ஒரு இரும்புத் துண்டைப் பழுக்கக் காயவைத்து அதில் வைத்து முறித்து விட வேண்டும். இந்த மருந்தை ஒரு அவுன்சு வீதம் காலை மாலை கொடுத்து வர வேண்டும்.

உப்பு , புளி தள்ளி பத்தியம் இருக்கவும்.

Show Buttons
Hide Buttons