குழந்தைக்கு சுரத்துடன் குளிர் நடுக்கமிருக்கும். உடல் சிலிர்க்கும். நெஞ்சில் கபம் கட்டி திட்டு முட்டடிக்கும். நாக்கிலே மாவு படர்ந்திருக்கும். வயிறு பொருமி மலம் தண்ணீராகக் கழியும். சோர்ந்து அழும்.
மருந்து
தைவேளை வேர் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
வசம்பு – 10 கிராம்
பூண்டு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
இவற்றை இளவருப்பாக வறுத்துப் பொடித்து ஒரு படி நீரிலிட்டு ஆழாக்காகக் காய்ச்சி கியாழத்தை ஒரு அவுன்சு மட்டும் காலை, மாலை கொடுத்து வர வேண்டும்.
ஆமையோடு – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
குரோசானி ஓமம் – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
கொத்தமல்லி – 15 கிராம்
இவற்றை தண்ணீர் விட்டு மை போல் அரைத்து மிளகளவு மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு மாத்திரை வீதம் சுடு தண்ணிரில் கரைத்துக் கொடுக்க வேண்டும்.