Last Updated:
May 12, 2020

Click here to submit your article
மூக்கு
Per Page :

மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்க

மாதுளம்பூ சாறு, அருகம்புல் சாறு இவைகளை கலந்து 1 டம்ளர் அளவு தினமும் இருவேளை அருந்தி வர மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்கும்.  →
0 Views : 0

மூக்கடைப்பு குணமாக

மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.  →
0 Views : 731

மூக்கடைப்பு குணமாக

மஞ்சளை எள் எண்ணெய் தடவி எரியும் நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் புகையை மூக்கில் உறிஞ்சி வந்தால் மூக்கடைப்பு அகலும்.  →
0 Views : 533

மூக்கில் உள்ள புண் ஆற

மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.  →
0 Views : 660

சதை வளர்ச்சி குணமாக

நாயுருவிவிதை, திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டுவரவும்.  →
0 Views : 1041

மூக்கில் இரத்தம் வருதல் குறைய

மூக்கில் இருந்து இரத்தம் வருவதுக் குறைய ஐஸ் கட்டியை ஒரு துணியால் கட்டி மூக்கின் மீது வைக்க வேண்டும். அல்லது ஒரு துணியால் ஐஸ் தண்ணீரைத் தொட்டு மூக்கின் மீது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐஸ் கிடைக்காத நேரங்களில் படிகாரத் தூளைத் தண்ணீரில் கரைத்து மூக்கின் மீது விட்டாலும் இரத்தம் வடிவது நின்றுவிடும்.  →
0 Views : 416

தும்மல் நிற்க

ஒரு சட்டியில் நெருப்புத் தணலைப் போட்டு அதன் மீது கஸ்தூரி மஞ்சளைத் தூவினால் வரும் புகையை உறிஞ்ச வேண்டும். கஸ்துரி மஞ்சளுக்கு பதிலாக மிளகை தூள் செய்து பயன்படுத்தினால் அதிக காட்டமான புகை வரும். இவற்றை உறிஞ்சினால் தும்மல் சீக்கிரம் மறைந்து போகும்.  →
0 Views : 620

மூக்கு சம்பந்தமான நோய்கள் குறைய

நாயுருவி செடி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குறையும்.  →
0 Views : 319

மூக்கில் இரத்தம் வருதல் குறைய

கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் குறையும்.  →
0 Views : 368

மூக்கில் இரத்தம் வருவது குறைய

பெரிய வெங்காயத்தை தோலை நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.  →
0 Views : 354

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X