கருப்பை நோய்கள் குணமாக
50 கிராம் கரிய பவளத்தையும், 6 தென்னம்பாளை பிஞ்சுகளையும் எடுத்து இடித்து நிழலில் உலர்த்தி அரைத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து...
வாழ்வியல் வழிகாட்டி
50 கிராம் கரிய பவளத்தையும், 6 தென்னம்பாளை பிஞ்சுகளையும் எடுத்து இடித்து நிழலில் உலர்த்தி அரைத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து...
தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.
இளம் தென்னை மட்டையை இடித்து பிழிந்த நீரை காலையில் குடித்து வந்தால் நீர்சுருக்கு தீரும்.
முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரைக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பாலில் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
தென்னம்பூவை வாயிலிட்டு மென்று சாப்பிட்டால் அரையாப்புக் கட்டி மற்றும் சிலந்திக் கட்டி குறையும்.
தென்னம்பூவை மென்று தின்று வந்தால் அடிப்பட்டதால் உண்டான உள்காயங்கள் குறையும்.