May 25, 2013
சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குறைய
மாவிலங்கஇலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பற்று போட்டால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாவிலங்கஇலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பற்று போட்டால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.
இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.
பிரம்மத்தண்டு இலையை அரைத்து கரப்பான், சொறி,சிரங்கு, உள்ளங்கை, உள்ளங்கால் வலி, பாதங்களில் வரும் புண் ஆகியவற்றின் மீது பூசி வர குணமாகும்.
சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கலந்து உள்ளங்கையில் தொடர்ந்து தடவி வந்தால் கைகள் மென்மையாகவும், நல்ல நிறம் பெற்று திகழும்.