ஆஸ்துமா, மார்புசளி தீர
சுண்டைக்காய்யை உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
சுண்டைக்காய்யை உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
ஓமவல்லி இலைச்சாறு, சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சீதன இருமல் குறையும்.
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சுச் சளிக் குறையும்.
தினமும் அருநெல்லிக்காய் சாப்பிடவும். மற்றும் பசுந்தயிரை தினமும் உணவில் சேர்த்து வரவும்.
கல்யாண முருங்கைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றை காலையில் குடித்து வந்தால் குணமாகும்.
வல்லாரைப் பொடி தூதுவளைப் பொடி ஆகிய இரண்டையும் பாலில் கலந்து குடித்து வரலாம்.
பிரமியவழுக்கைஇலையை அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.