வாய்ப்புண் குறைய
நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
வாய் நாற்றம் குறைய
கொட்டைப் பாக்குடன் சிறிது கிராம்பு சேர்த்துப் பொடி செய்து சாப்பாட்டிற்குப் பின் வாயிலிட்டு பின் துப்பி விட வாய் நாற்றம் குறையும்
பசியைத் தூண்ட
கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல பசி எடுக்கும்.
வாய்ப்புண் குறைய
ஒதியம் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைத்து பின்பு அந்த நீரை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
பசியின்மை குறைய
முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
பசியின்மை குறைய
நல்லவேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும் பசியின்மை குறையும்.
பசி எடுக்க
கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால்...
வாய் நாற்றம் குறைய
தினசரி கோதுமைப் புல்லை வாயிலிட்டு மென்று துப்பி விட வாயில் ஏற்படும் துர் நாற்றம் குறையும்.
பசியின்மை குறைய
ஆரைக்கீரையைப் பாசிபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியும் பசியும் உண்டாகும்.