பல் வலியைப் போக்க
ஒரு கரண்டி மிளகுடன் 2 கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு கரண்டி மிளகுடன் 2 கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.
எலுமிச்சை பழத்தில் சிறு துவாரம் செய்து நகச்சுற்று உள்ள விரலில் புகுத்தி வைத்தால் நகச்சுற்று வலி குறையும்.
பத்து வேப்பிலையோடு, பத்து மிளகு சேர்த்து நீர் விட்டரைத்து விரலில் கட்டி, சிறிது உண்ண நகச்சுற்று குறையும்
புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட பற்கள் வலுவடையும்.
புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.
உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
புளி,உப்பு எடுத்துக் கசக்கி பல்வலி உள்ள இடத்தில் தினமும் வைக்க பல்வலி குறையும்.