வாயு தொந்தரவு குறைய
ஆரஞ்சுபழ தோல்களை தண்ணிரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் வாயு தொந்தரவு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆரஞ்சுபழ தோல்களை தண்ணிரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் வாயு தொந்தரவு குறையும்.
முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்
வேலிப்பருத்தி வேரை பொடி செய்து 4 சிட்டிகை அளவு பாலில் கலந்து கொடுக்கலாம்.
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.