இருமல் குறைய
வேலிப்பருத்தி இலைகளை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி இலைகளை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
முளைக்கீரை, ஒரு துண்டு அதிமதுரம், 3 சிட்டிகை மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
இன்புறா இலையுடன்,வல்லாரை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிக்கட்டி காலை,மாலை குடித்து வந்தால் இருமல் மற்றும் சுவாசகாசம் குறையும்.
தான்றிக்காயின் தோலை இடித்துப் பொடி செய்து உணவிற்குப் பிறகு இரண்டு சிட்டிகை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக நீங்கும்.
கரும்புச் சாற்றில் ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) பார்லியை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டுவர நீர்க்கடுப்பு, நீரடைப்பு விலகும்.
பிரண்டையை காய்ந்த முள்ளங்கியுடன் கறுக வறுத்து காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
ஒரு நெருஞ்சில் செடியை வேருடன் கொண்டு வந்து கழுவி சுத்தம் செய்து உரலில் போட்டு சாறு எடுத்து அரை டம்ளர் சாற்றில்...