தேவையான பொருள்கள்:
- மிளகு = 200 கிராம்
- சீரகம் = 25 கிராம்
- வெந்தயம் = 25 கிராம்
- கடுகு = 25 கிராம்
- பெருங்காயம் = 25 கிராம்
- பெருஞ்சீரகம் = 25 கிராம்
- ஏலக்காய்= 25 கிராம்
- ஜாதிக்காய் = 50 கிராம்
- தேன் = 500 கிராம்
- நெய் = சிறிது
- பால் = சிறிது
செய்முறை:
- மிளகை நன்றாக இடித்து கொள்ளவும்.
- சீரகத்தை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி பிறகு வறுத்து இடித்து கொள்ளவும்.
- வெந்தயத்தை கழுவி நிழலில் உலர்த்தி சிறிது நெய் விட்டு வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
- கடுகை நீர் விட்டு பிசைந்து கழுவி நிழலில் உலர்த்தி சிறிது நெய் விட்டு வறுத்து கொள்ளவும்.
- பெருங்காயத்தை நன்கு உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி பாலை விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
- ஏலக்காயை நெய்யில் வறுத்து இடித்து கொள்ளவும்.
- ஜாதிக்காயை சிறு துண்டுகளாக உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
- எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு தேனை ஊற்றி மரக்கரண்டியால் கிளறி விட்டு பானையை மண் மூடியால் மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி 3 நாட்கள் கழித்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
- காலை உணவுக்கு 1 மணி நேரம் முன் 1 தேக்கரண்டி அளவு மருந்து சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பு குறையும்.