பச்சை வேப்பிலை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். பின்பு எட்டி மர இலைகளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் பதம் வந்தவுடன் வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை வேப்பிலை மீது விட்டு நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.