சில குழந்தைக்கு அம்மைக் கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவிக் கொப்பளிக்கும். அவற்றை மட்டுபடுத்தலாம். ஆரம்பத்திலே இந்தச் சிகிச்சையை செய்தால் அதிகமாகாது.
குங்கிலிய சூரணம்
வெள்ளைக் குங்கிலியம் 35 கிராம் வாங்கி வந்து இரண்டு இளநீரைச் சீவி மண் பாத்திரத்தில் விட்டு அதில் குங்கிலியத்தை போட்டு, அடுப்பில் வைத்து , நீர் சுண்டுகிற வரையில் எரிக்கவும். பிறகு குங்கிலியத்தை கல்வத்திலிட்டுப் பொடித்து சூரணமாக்கி சீசாவில் பத்திரப் படுத்தவும்.
குழந்தைக்கு அம்மை என்று தெரிந்ததும் 2 அரிசி எடை சூரணத்தை வெண்ணையில் குழைத்து காலை, மாலை கொடுக்க வேண்டும்.