காக்கை வலி

காக்கை வலிக்கு உடனடியான சிகிச்சை,நோயாளியை அகலாமான கட்டிலில் படுக்க வைத்துத் தலையை உயர்த்தி, ஆடை ஆபரணங்களை தளர்த்தி, பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். பற்களுக்கு இடையில் கனத்த அட்டை துண்டுகள் அல்லது கார்கையாவது வைத்து நாக்கை கடித்து துண்டித்து விடாத படி கவனிக்க் வேண்டும்.

‘காக்கை வலி’க்கு மருந்து நீடித்து சாப்பிட வேண்டும். உடலைத் தேற்றி, நரம்புகளுக்கு பலம் வரும்படியாக போஷாக்கு ஊட்ட வேண்டும்.

காக்கை வலிப்பு வந்திருக்கும் சமயத்தில் அவசர சிகிச்சை

மருந்து 1

மயிலிறகு – 15 கிராம்
மிளகு – 10 கிராம்
வசம்பு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
கடுகு – 10 கிராம்
செம்மறியாட்டுக் கொம்பு – 10 கிராம்
குதிரைக் குளம்பு – 10 கிராம்
பேயத்தி வேர் – 10 கிராம்
அழிஞ்சில் வேர் – 10 கிராம்

ஒன்று சேர்த்து பொடி செய்து கம்பளியிலே சுற்றி திரி போலாக்கி வேப்பெண்ணெயில் நனைத்துக் கொளுத்தி, புகையைச் சுவாசிக்க செய்ய வேண்டும்.

மருந்து 2

குங்குமப்பூ (உயர்ந்த ரகம்) – 10 கிராம்
சங்கன்வேர் மேல்ப்பட்டை – 10 கிராம்
எருக்கன்வேர் மேல்ப்பட்டை – 10 கிராம்
கொடிவேலி மேல்ப்பட்டை – 10 கிராம்

இவற்றை மைபோலத் துளசிச்சாறு விட்டு அரைத்துச் சுடு தண்ணீர் கலந்து வேளைக்கு 1 முதல் 1’1/2 அவுன்சு வீதம் கொடுத்து வரக் குணமாகும்.

மேலே தடவ எண்ணெய்

வசம்பு – 30 கிராம்
மயிலிறகு சாம்பல் – 30 கிராம்
வெள்ளைப் பூண்டு – 30 கிராம்
புங்காங் கொட்டை (பூந்திக் கொட்டை) – 30 கிராம்
வேப்பெண்ணெய் – 16 அவுன்சு

சரக்குகளை துளசிச்சாற்றில் அரைத்து வேப்பெண்ணெயில் கரைத்து , எரித்து , வடித்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.

வலிப்பு வரும் சமயத்திலும், வந்த பிறகும், வருவதற்கு முன்பும் கூட இந்தத் தைலத்தை தடவி வர வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons