சுரம் அதிகமாக இருக்கும். மலசலம் இறங்காது. குழந்தை ஏங்கி ஏங்கி அழும். திடிரென்று பயந்தும் அழும். கண் விழிகளை சுழற்றி வேரிப்புடன் பார்க்கும். பால் குடிக்காது.
மருந்து
சங்கன் வேர் – 10 கிராம்
ஆடாதோடை வேர் – 10 கிராம்
புங்கமரத்துப் பட்டை – 10 கிராம்
கொடிவேலி வேர் – 10 கிராம்
கொன்றை வேர் – 10 கிராம்
இந்துப்பு – 10 கிராம்
இவற்றை ஒரு படி நீரில் போட்டு கால் லிட்டர் ஆக வற்றிய கியாழத்திலே காலை, மாலை வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் கொடுத்து வரவும்.
தாய் உப்பு, புளி தள்ளி பத்தியம் இருக்க வேண்டும்.