வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பறங்கிச்சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.