தேவையானப் பொருட்கள்:
- கடுகு– 2 டேபிள்ஸ்பூன்
- புளி – தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் – 2
- தேங்காய் துண்டு – 2
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
- தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.