வாத நோய்கள் குறைய‌

தேவையான பொருட்கள்:

  1. எள்ளெண்ணெய்-1 லிட்டர்
  2. சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர்
  3. பசும் பால்-1 லிட்டர்
  4. பசும் நெய்-1 லிட்டர்
  5. செவ்விளநீர்-1 லிட்டர்
  6. கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்
  7. பொன்னாங்கண்ணிச் சாறு-1 லிட்டர்
  8. வல்லாரை சாறு-200 மி.லி
  9. அவுரி வேர்-200 மி.லி
  10. தழுதாழை இலை-50மி.லி
  11. சிறு செருப்படை இலை-50மி.லி
  12. நொச்சி இலை-50மி.லி
  13. சோற்றுக் கற்றாழைச் சோறு-50மி.லி
  14. முருங்கை இலை -50மி.லி
  15. கற்பூரவல்லி-50மி.லி
  16. தூதுவளை இலை-50மி.லி
  17. கண்டங்கத்திரி இலை-50மி.லி
  18.  புளியாரைக்கீரை-50மி.லி
  19. முசுமுசுக்கை இலை-50மி.லி
  20. சங்கங்குப்பி இலை -50மி.லி
  21. சிறுகீரை-50மி.லி
  22. வேளைக் கீரை-50மி.லி

செய்முறை:
எள்ளெண்ணெய்யை ஒரு மண் பானையில் ஊற்றி விறகடுப்பில் வைத்து சிறு தீயாக ஏழு நிமிடம் எரித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை ஊற்றி ஒரு நிமிட்ம எரித்து பசும் நெய்யை ஊற்றி ஒரு நிமிடம் எரித்து பசும் பால் செவ்விளநீர் இரண்டையும் ஊற்றி 5 நிமிடங்கள் எரித்து கரிசலாங்கண்ணிச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளை ஊற்றி 30 நிமிடங்கள் சிறு தீயாக எரித்துக் கொள்ளவேண்டும். அவுரி வேரைத் தட்டி ஒரு மண் பானையில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு மூடி நன்றாக எரித்து  கஷாயம் 200 மி.லிட்டர் அளவுக்கு சுண்டியதும் தைலப் பானையில் ஊற்ற வேண்டும். தழுதாழை முதல் வேளைக் கீரை வரையுள்ள இவைகளை ஒன்றாக கல் உரலில் இடித்து, இடித்ததை அப்படியே  தைலப் பானையில்  போட்டு விறகடுப்பில் வைத்து தைலப் பதம் வரும் வரை சிறு தீயாக எரித்து இறக்கிக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும்  முறை:
பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி நன்றாக உருவி விட்டு வெந்நீரில் குளிப்பட்டவேண்டும். 20 நாட்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாளும், 20 நாட்களுக்கு மேல் 2 நாளைக்கு ஒரு நாள் வீதம் 10 முறையும், பின் 3 நாட்களுக்கு ஒரு முறை வீதம் 10  முறையும் பயன்படுத்தலாம்.

Show Buttons
Hide Buttons