பேதியக்கர மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். சுவாசம் அனல் வீசும். உதடு, வாயின் உள்பக்கம், தொண்டை முதலியவைகள் வெந்து புண்ணாக இருக்கும். வாயை திறக்க முடியாமல் வாயை மூடிக்கொண்டே இருக்கும்.

மணத்தக்காளி இலைச்சாறு – 8 அவுன்சு
சோற்றுக் கற்றாழச்சாறு – 8 அவுன்சு
வெங்காயச்சாறு – 8 அவுன்சு
துளசிச்சாறு – 8 அவுன்சு
சிற்றாமணக்கு எண்ணெய் – 16 அவுன்சு
மருக்காரை வேர் – 50 கிராம்
நிலாப்பூலா வேர் – 50 கிராம்
துத்தி வேர் – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்

வேர் மூன்றையும் , வெந்தயத்தையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து சாறுகளுடன், சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து சீசாவில் பத்திரப்படுத்தவும். குழந்தைக்கு வேளைக்கு அரைத் தேக்கரண்டி அளவு உள்ளுக்குள் கொடுத்து உதடு, வாய் முதலியவைகளிலும் தடவி வரலாம்.

ஓமம் – 10 கிராம்
கோஷ்டம் – 10 கிராம்
வசம்பு – 1 கிராம்

இவற்றை கால் லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிய கசாயம் காலை மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுத்து வர வேண்டும்.

Show Buttons
Hide Buttons