பித்த வாயு குறைய

  • செய்முறை:
  • 30 கிராம் அளவு சுத்தமான சீரகத்தை எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு சீரகம் சரியாக மூழ்கும் அளவு எலுமிச்சை பழச்சாறு விட வேண்டும். இதை அப்படியே பனியில் வைத்து விட வேண்டும். மறுநாள் அதை ஒரு அகலமான தட்டில் போட்டு காய்ந்த பின் மாலை நேரத்தில் மறுபடியும் பாத்திரத்தில் போட்டு மேலும் சிறிது எலுமிச்சை பழச்சாறு விட்டு பனியில் வைத்து மறுநாள் எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு 3 முறை செய்து வர வேண்டும்.
  • பிறகு நான்காம் நாள் கரிசலாங்கண்ணி இலைகளை தட்டி அதன் சாறை எடுத்து அந்த சீரக கலவையில் விட்டு பனியில் வைத்து மறுநாள் எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். இதையும் 3 நாட்கள் செய்ய வேண்டும்.
  • பிறகு அதை எடுத்து 3 சாறு விடாமல் தட்டில் போட்டு 3 நாட்கள் நிழலிலும், 2 நாட்கள் வெயிலிலும் வைத்து நன்றாக காய்ந்த பின் அதை தூள் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொண்டு 1 ஸ்பூன் அளவு கற்கண்டு தூள் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பித்தம், பித்த வாயு குறையும்.
Show Buttons
Hide Buttons