சுரக் கழிச்சல்

குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் , தண்ணீரையும் கழியும். இருமலும், நாவறட்சியும் , நீரடைப்பும் காணும்.

மருந்து

மாதுளங்கொழுந்து – 75 கிராம்
அத்திப்பட்டை – 75 கிராம்
சாதிக்காய் – 10 கிராம்
சாதிப்பத்திரி – 10 கிராம்
அதிவிடயம் – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
மிளகு – 10க்ரம்
கடுக்காய் – 10 கிராம்
தான்றிக்காய் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சுக்கு – 20 கிராம்

அனைத்தையும் நைய நசுக்கி ஒன்றரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் சிறிது தேனும் கலந்து கொடுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons