குழந்தைக்கு சுரம் 102 டிகிரிக்கு மேல் இருக்கும். குளிர் தாங்காமல் அவதிப்படும். உடம்பு நடுங்கும். நாவறட்சியும்,பசிமந்தமும் ஏற்படும்.
மருந்து
சீந்தில் தண்டு – 15 கிராம்
நிலவழுதலை – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
கோரைக்கிழங்கு – 15 கிராம்
நெல்லி வற்றல் – 15 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்து அரை லிட்டர் நீரிலிட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம்
திப்பிலி சூரணம் – 5 கிராம்
தேன் – 1/2 தேக்கரண்டி
சேர்த்து கலக்கி காலை, மாலை கொடுக்க குணமாகும்.
மருந்து 2
மிளகு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
பெருங்காயம் – 5 கிராம்
கழற்சிப் பருப்பு – 15 கிராம்
ஒன்று சேர்த்து தேன் விட்டு மை போல அரைத்து மாதிரிகளாக உருட்டி காலை, மாலை 2 மாத்திரை கொடுக்க குணமாகும்.