சன்னிபாத சுரம்

குழந்தைக்கு வரும் சுரங்களில் இது மிகவும் கடுமையானது. சுரம் ஆரம்பத்தில் 101, 102 டிகிரி இருக்கும். மாலையில் அதிகமாகும். நெற்றியில் வலி இருக்கும். சிறு குடலில் அழற்சி கண்டு வலியுண்டாகும். வயிற்றோட்டமும் உண்டாகும்.

சுரம் கண்ட 7 வது நாளிலிருந்து 12 நாளுக்குள் செந்நிறமான தடிப்புகள்,நெஞ்சு, வயிறு ,முதுகு முதலிய இடங்களில் காணும்.

2 வது வாரத்தில் 104 டிகிரி சுரம் காணும். இந்த சுரம் 21 நாள் வரை நீடித்திருக்கும். ஒரு மாதத்திற்கு மேலும் நீடிப்பது உண்டு.

மருந்து

நிலவேம்பு – 15 கிராம்
ஆடாதோடை இலை – 15 கிராம்
சீந்தில் தண்டு – 15 கிராம்
சிறு தேக்கு – 15 கிராம்
செவ்வியம் – 15 கிராம்
செங்கழுநீர்க் கிழங்கு – 15 கிராம்
சிறுகாஞ்சொறி – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கோரைக் கிழங்கு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
கடுக்காய்த் தோல் – 15 கிராம்
பொன் முசுட்டை – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
வாய்விளங்கம் – 15 கிராம்

இவற்றை தட்டி இரண்டு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினசரி 3 வேளை கொடுத்து வர குணமாகும்.

Show Buttons
Hide Buttons