வெந்தயத்தை எடுத்து பசும் பால் விட்டரைத்துக் கொள்ளவேண்டும். வல்லாரை இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வல்லாரைச் சாற்றுடன் வெந்தயத்தைக் கலந்து கரைத்து இவற்றுடன் சிற்றாமணக்கு எண்ணெயை கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடித்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் கணைச் சூடு குறையும்.