கருங்காலிக் கட்டை 100 கிராம், தேத்தான் கொட்டை 100 கிராம், கருப்பு எள் 100 கிராம்-இந்த மூன்றையும் தனித்தனியே தூள் செய்து ஒன்றாக கலந்து இதில் 10 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி காலையும், மாலையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.