கடுக்காயை உடைத்து, அரிசி கழுவிய நீரில் ஒருநாள் ஊறவைத்து, மறுநாள் வெயிலில் காயவைத்து உலர்த்தியபின் எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும். 3 நாட்கள் ஊறியதும் அரைமணி நேரம் உலர்த்தி கொட்டையை நீக்கிக் கொள்ளவும். தேனை அடுப்பில் சூடாக்கி அதில் கடுக்காய்த் துண்டுகளைப் போட்டு 10 நாட்கள் ஊறிய பிறகு தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு துண்டு கடுக்காய் சாப்பிட்டு வர உடலில் பொலிவும், இளமையும் கூடும்.