கற்பூர வாழைக்காயை வெட்டி காயவைத்துக் கொள்ளவேண்டும். நன்றாக காய்ந்தவுடன் இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் 500 கிராம், பனங்கற்கண்டு 25 கிராம், ஏலக்காய் பொடி 10 கிராம் ஆகியவைகளை ஒன்றாக கலந்து அரைக் கரண்டி வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் குறையும்.