செய்முறை:
5 x5 x5 நீல , அகல, உயரமுள்ள செங்கல் தொட்டி அமைத்து அடிப்பரப்பில் 15 செ.மீ , மண் 15 செ.மீ, மக்கிய உரம் 10 செ.மீ, மாட்டு சாணம் ஆகியவற்றை இட்டு அதன் மேல் 15 செ.மீ நிற்கும் அளவு நீர் கட்டவும். மூன்று நாட்கள் கழித்து அசோலா விதையை விடலாம். நாள் தோறும் 15 செ.மீ அளவு தண்ணீர் குறையாமலும், மிகாமலும் கண்காணிக்கவும். 10,15 நாட்களில் அசோலா பலமடங்காக பெருக ஆரம்பிக்கும்.
பயன்கள் :
1. நெற்பயிரடப்பட்ட நிலத்தில் 25 செ.மீக்கு மேல் பயிர் வளர்ந்தவுடன் தண்ணீர் சுமார் 15 செ.மீக்குக் குறையாமல் நீர் நிரப்பி இந்த அசோலாவை விடலாம். இது பயிருக்கு தேவையான தழைச்சத்தை காற்றில் இருந்து பயிருக்கு சேர்க்கிறது. தண்ணீர் இல்லாமல் அசோலா காய்ந்தவுடன் சாம்பல் சத்தாக மாறி விடுகிறது.
2. கால்நடைக்குத் திவனதுடன் சேர்த்து கொடுப்பதன் மூலம் கால்நடை வளர்ச்சியும் மற்றும் பாலின் அளவு அதிகரிக்கும்.
3. மீன்களின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகிறது.