ஷுபாலிஷ் ஜொலிக்க
சின்னக் குழந்தைகளின் ஷுக்களுக்கு தினம் பாலிஷ் போட அவகாசம் இல்லை என்றால் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் ஜொலிக்கும்
வாழ்வியல் வழிகாட்டி
சின்னக் குழந்தைகளின் ஷுக்களுக்கு தினம் பாலிஷ் போட அவகாசம் இல்லை என்றால் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் ஜொலிக்கும்
தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
தேங்காய் உடைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்தால் நேர் பாதியாக உடைபடும். தேங்காய் துருவும் போது பிசிறுகள் பாத்திரத்தில் விழாது.
தேங்காய் பர்பி செய்து இறக்கும் போது சிறிது கடலை மாவைத் தூவிக் கிளறி இறக்கினால் நன்கு சேரும். சுவை அதிகமாக இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்துக் கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
இறைச்சியை வேக விடும் போது தேங்காய் ஒட்டுத்துண்டுடன் வேக விட்டால் மிருதுவாக வெந்து பதமாக இருக்கும்,பிறகு ஓடுகளை எரிந்து விடலாம்.
தேங்காய் வாங்கி பொரியல் கூட்டுகளில் போட்டு சமைக்க முடியாத நேரங்களில் பொரியலில் சுவை கூட்ட புழுங்கல் அரிசியைப் பொரித்துப் போடி செய்து அதில்...
தேங்காய்ச்ச்சட்னிக்கு அரைக்கும் போது பச்சை மிளகாய்களை எண்ணையில் ஒரு வதக்கு வதக்கி அரைத்துத் தொட்டுக் கொள்ளலாம்.
சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையும், கருவேப்பிலையும் போட்டு மூடி வைக்கவும். மணமாக இருக்கும்.