ஊமை காயங்கள்
வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து ஊமை காயத்தின் மேல் போடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து ஊமை காயத்தின் மேல் போடலாம்.
சுண்ணாம்பு, பனைவெல்லம் இவைகளை மைப்போல் அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.
பனை வெல்லம், சுண்ணாம்பு எடுத்து நன்கு பொடி செய்யவும். துணியை சுட்டு கரியாக்கிக் கொள்ளவும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து...
மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு இம்மூன்றையும் சூடு தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் சுளுக்கு குறையும்.
அமுக்கிரான் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப்போட்டு வந்தால் கழுத்து வலி குறையும்.
மஞ்சள், அருகம்புல்,சிறிதளவு சுண்ணாம்பு இவைகளை கலந்து பூசி வர நகச்சுற்று குறையும்.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்றுக்கு பூச நகச்சுற்று குறையும்.
அருகம்புல்லை அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.
முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.