தலைபாரம் சரியாக
இஞ்சி சாறு, பால், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு நாள் தேய்த்து குளிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
இஞ்சி சாறு, பால், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு நாள் தேய்த்து குளிக்கலாம்.
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.
நுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்க வலி தீரும்.
வாய்விளங்காப் பொடியை வேளைக்கு 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து 3 வேளை கொடுத்து மறுநாள் ஆலிவ் ஆயில் குடிக்க குணமாகும்.
ஒரு கரண்டி சீரகத்தை தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலை முழுகி வர கண் நோய் குணமாகி கண் பிரகாசமாகும்.
சிறுதேள்கொடுக்கு இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி காதில் விட காதுமந்தம் சரியாகும்.