இதய பலவீனம் தீர
செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அத்துடன் மருதம்பட்டை தூள் சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அத்துடன் மருதம்பட்டை தூள் சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும்.
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கஷாயம் முதலியவற்றை 10 நாட்கள் சாப்பிடவும்.
துளசி இலைசாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் குறையும்.
இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து நன்கு அரைத்து ஒரு சிறு உருண்டை தினந்தோறும் அதிகாலை சாப்பிட்டு வரலாம்.
வில்வமரத்தின் வேர் பட்டையை தூள் செய்து பாலுடன் கலந்து குடித்து வர நீண்ட நாள் வாழலாம்.