தொண்டை வலி குறைய
அக்கரகாரம் வேரை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சிக் காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அக்கரகாரம் வேரை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சிக் காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றை பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.
அன்னாச்சிப் பூவின் பொடியை பாலில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
பாலுடன் மஞ்சள், மிளகு போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக கழுத்தில் பூசினால்...
கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றைதண்ணீர் விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.
மாதுளம் பூவுடன்,மாதுளம் மரப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குறையும்.
இரண்டு கிராம் அதிமதுரப் பொடியை இரண்டு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.