மலச்சிக்கல் குறைய
பசலை இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு அவுன்சு நீருடன் தேன் கலந்து குடிக்க மலச்சிக்கல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பசலை இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு அவுன்சு நீருடன் தேன் கலந்து குடிக்க மலச்சிக்கல் குறையும்.
ஆடாதோடை இலை 2, வெற்றிலை 2, மிளகு 5, சுக்கு 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி,...
ஒரு கப் பாலில், மருது இலை இரண்டு அரைத்து கலந்து குடித்திட பித்தவெடிப்பு குறையும்.
முசுக் கொட்டை இலைகளோடு, வேப்பிலைகளைச் சேர்த்தரைத்து, நீண்டநாள் படுக்கையில் இருந்தால் ஏற்படும் படுக்கைப்புண் மீது பூசிவர படுக்கைப்புண் குறையும்.
நொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை கரண்டி நெய், இரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து பூச இடுப்புவலி குறையும்.
கீழாநெல்லி இலையுடன், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி அரைமணி நேரம் ஊறியபின் குளித்துவர உடல் அரிப்பு குறையும்.
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.