சருமம் பிரகாசமாக இருக்க
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தின் மீது பூசி வந்தால் மென்மையும் பிரகாசமும் கூடும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தின் மீது பூசி வந்தால் மென்மையும் பிரகாசமும் கூடும்.
உடலில் தேவையில்லாத இடத்தில முடிகளை அகற்ற கடலை மாவு அல்லது மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
நெருப்புக்காயத்துக்கு மண்ணெண்ணெய் தடவினால் காயத்தில் எரிச்சலும் கொப்புளமும் உண்டாகாது.
உளுந்தம் மாவில் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து சேற்றுப்புண்ணின் மீது தடவினால் குணமாகும்.
ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரப் பொடியை போட்டி காய்ச்சி சுளுக்கிய இடத்தில் சூடு வர தேய்த்தால் சுளுக்கு விடும்.
நெற்றியில் பொட்டு வைத்த இடம் கறுப்பானால் வில்வமரப் பட்டையை அரைத்துப் பூசினால் குணமாகும்.
இரவில் படுக்கையில் சிறுநீர் போகும் குழந்தைகளுக்கு உறங்க போவதற்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் கொடுத்தால் போதும்.
வேர்க்குரு, தேமல், துணியினால் உண்டாகும் படை நோய் நீங்க நல்ல சந்தனத்தை அரைத்து தேய்க்கவும்.