தொண்டைவலி குறைய
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.
சீத்தாப்பழ இலைகளை காய வைத்து பொடியாக்கி 1 கிராம் அளவு பொடியை சூடான பால் கலந்து குடித்தால் தொண்டைவலி குறையும்.
எலுமிச்சை இலைகளை, நீர்லிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.
பெருவிலை இலைகளை நீரில் ஊறவைத்து ஊறிய நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குறையும்.
முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.
வெள்ளரி இலைகளோடு,சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி குறையும்.
சிற்றரத்தை இலைகளை நீரில் ஊற வைத்து,இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறைந்து,வாய் நாற்றம் குறையும்.
சீரக இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,தேனுடன் கலந்து அருந்தி வந்தால் தொண்டை வலி குறையும்.
இலந்தை மர இளந்தளிரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாயில் ஊற்றி தொண்டை நனையுமாறு செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை...
நல்ல மிளகு இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரிலிட்டுக் குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு குறையும்.