பித்தம் தணிய
கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து துவையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து துவையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்தம் குறையும்.
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
கைப்பிடியளவு வில்வ இலையை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி கொடுத்து வர பித்தம் குறையும்.
புங்க மரத்தின் வேரைப் பொடியாக நறுக்கி அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலையாக...
அன்னாசி பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.