வீக்கம் குறைய
மாவிலங்க இலையை எடுத்து நன்கு அரைத்து பற்றுப்போட்டு வந்தால் உடலில் ஏற்படும் அனைத்து வீக்கமும் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாவிலங்க இலையை எடுத்து நன்கு அரைத்து பற்றுப்போட்டு வந்தால் உடலில் ஏற்படும் அனைத்து வீக்கமும் குறையும்.
சாறுவேளை இலையை எடுத்து வதக்கி உடலில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
காக்கரட்டான் விதைப்பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் ஆகியவற்றை சேர்த்து ஒரு வேளை மூன்று...
வெற்றிலையில் வேப்பஎண்ணெய் தடவி சூடு உடல் தாங்குமளவுக்கு தணலில் வாட்டி உடலில் வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்
வாதநாராயணன் இலை சாறு ஒரு அவுன்ஸ் குடித்து வர வாத வீக்கம், குடைச்சல் வலி குறையும்.
முருங்கை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தைவேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து, வாதவீக்கத்திற்கு பற்றிட வாதவீக்கம் குறையும்.
முடக்கத்தான் இலையை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வாதவீக்கம் குறையும்.